இறைவன் வணக்கம் மற்றும் சித்தர் துதி
எல்லாம் வல்ல இறைவனை நோக்கி சிவவாக்கியர் சித்தர் நல்லாசியுடன் , அவரது முதல் பாடலான
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்தோச தோச பாவமாயை தூர தூர ஓடவே
விளக்கம்:
அறிவதற்கு அரிய மறைபொருளாம் இறைவன் சிவபெருமானை ஆதி தேவர்கள் அன்று போற்றிய நமசிவாய ஐந்து எழுத்து மந்திரத்தை மனதிற்குள் வைத்து ஓத எதிர்வரும் இன்னல்கள் விலகி ஓடுமே...
விளக்கம்: கருமையான நிறத்துடன் காணப்படும் இறைவன் விநாயகரை வழிபட்டு கற்க விரும்பும் அரிய ஞானத்தை பேயனாய் விளம்பிடினும் கற்றுயுனர்ந்த பெரியவர்கள் பொருத்து அருள வேண்டுகிறேன்..கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்கள் நூற் கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவேபெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே
ஆகிய பாடல்களை துணையாக கொண்டு இந்த வலைப்பதிவில் தொடங்குகிண்றேன்.
சிவாயநம!!!