Advertisement

திருமூலர் கூறும் ஒப்பில்லாத தம்பிரான் அருட் செய்கையும் அவனை அடையும் வழியும்!

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books "Thirumoolar's Thirumanthiram". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

செயற்கரிய செயல் செய்யும் தலைவன்!

தன்னுடைய நிகரற்ற தன்மையை மறைத்துக் கொண்டு, அற்பமான மனிதர்களின் தகுதிக்கு ஏற்ப தன்னை தாழ்த்திக் கொண்டு அந்த உயிர்களுக்கு நிகராக வந்து அமர்ந்து அருள் புரிகிறார். யார் செய்வார் இந்த செயலை ? எவர் துணிவார், இது போன்ற செயலைச் செய்ய ? மலமிலாத, மலமறுக்கும் பித்தன் மட்டுமே இதைச் செய்வான். அப்படிப்பட்ட உயர்ந்த சிவத்தை நாம் எப்படித் துதித்து வழிபடுவது ? செய்வது ஒன்றும் அறியாமல் விழிக்கின்றோமே ? நமசிவாய.

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு,
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து,
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்,
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.

 விளக்க உரை :

*தண்ணின்ற தாள்(திருவடி) - குளிர்ச்சி பொருந்திய இணையில்லாத திருவடி.
*களிம்பு - தேவையற்ற பொருள். உயிர்களிடம் பொருந்தியுள்ள மலம்.

ஆகாயத்தைவிட பெருமைமிக்க சிவபெருமான், தன் நிலையையைத் தாழ்த்திக் கொண்டு, உயிர்களின் தன்மைக்கு பொருந்தும் திருமேனி தரித்து தன் குளிர்ச்சி பொருந்திய இணையில்லா திருவடியை மலப் பிணி அண்டாது காவலாக வைத்து, நம் மனதிற்குள் நின்று நம்மை உருக்கி பேரானந்தத்தை நல்கி, நம்மோடு பொருந்தியிருக்கும் மலத்தை தன் பார்வையாலே அறுத்து நீக்கி அருள் புரிகிறாரே.

இந்த செயலை இவரை விட வேறு எவர் செய்ய முடியும். அத்தகைய பெருமானை, நாம் எப்போதும் ஏத்துவோம். நமசிவாய.


சிவனை அடைய வழி யாது ?

ஒற்றை ஊசியின் மேல் நின்று கொண்டு நான் பல ஆண்டுகள் தவம் செய்ய வேண்டுமா ? இல்லறத்தை துறந்து காட்டிற்குள் சென்று கரையான் புற்று மறைக்க அவனை வேண்டி நிற்க வேண்டுமா ? அவனைத் தேடித் தேடி உடல் நோக காடு மலை கடக்க வேண்டுமா ? பெரிய விளக்கிலே திரியாக நம் உடலை இட்டு எரிக்க வேண்டுமா ? எத்தனை பெருமையுடைய பரம்பொருளை எத்தனை தியாகம் செய்து அடைய முடியும் என்றாலும் அது தகும். ஆனால், அந்த பரம்பொருளோ, அனைவராலும் கொடுக்கக்கூடிய சாதாரண பொருளைக் கொடுத்தாலே நம் அன்பு வலையுள் அகப்பட்டு நமக்கு அருள் புரிந்து விடும் தன்மையைக் கொண்டுள்ளதே. இந்தக் கருணையை என்னவென்று சொல்வது ? அந்த பரம்பொருளுக்கு நாம் என்ன கொடுக்க முடியும் ? நம்மிடம் நம் பொருள் என்று என்ன இருக்கிறது ? பூவும் நீரும் கொடுத்தாலே அந்த பரம்பொருளை நம் வசப்படுத்தி விடலாம். 

இந்த சிறு ரகசியம் கூட தெரியாமல் எத்தனை பாவிகள் ஈசனைப் பெறாமல் பிறப்புச்சுழியில் விழுந்து தவிக்கிறார்கள்?

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே.

விளக்க உரை :

சிவனை அடைதற்குச் எளிதான தவம் யாது' எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவ்விடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள் புரிகின்றான். அஞ்ஞானமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.

திருச்சிற்றம்பலம்!!!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement