About

இந்து சமயம் என்பது சைவ, வைணவ சமயங்களைக் குறிக்கிறது. சைவ சமயமே அநாதியானது. தொன்று தொட்டு வருவது. வைணவம் பின்னாளில் தோன்றியது. ஆகவே சைவ சமயமே சமயம் என்பர் பெரியோர். அத்தகைய நம் சமயத்தில் ஞானம் வற்றாத ஊற்றாக பொதிந்து கிடக்கிறது. இன்றைய நடைமுறையில் பள்ளியில் சேர்ந்து படித்து வேலை பெற்று வாழ்கை நடத்தி வருபவர்களுக்கு இத்தகைய ஞானம் ஒன்று இருப்பதைப் பற்றியே தெரியாமல் இருக்கிறது. இதற்கு நம் கல்வி முறையில் இருந்து நம் சமய செய்திகளை திராவிட அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு விலக்கி அழித்ததே காரணம். நம் சமயங்களின் அடிப்படை தத்துவங்கள், கொள்கைகள், நூல்கள், குருமார்கள், நமது வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அடையாளம் காட்டுவதே இந்த "பிறைசூடி"(https://Piraisoodi.blogspot.com) வலைப்பதிவின் தலையாய குறிக்கோள். 

சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்

அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்

இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!

கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே!

நாம் அனைவரும் தொடர்ந்து நம் வேலைகளை பார்த்துக்கொண்டே, புதுப்புது திருமுறை பாடல்களை படித்தும், அதன் பொருள் அறிந்தும், சைவ சித்தாந்தம் படித்தும், கோவில் தல வரலாறுகள் அறிந்தும், நம்மால் இயன்ற சிவப்பணிகளை செய்தும், நம் குருமார்களின் வரலாறு அறிந்தும், அவர்கள் செய்த செயற்கரிய செயல்களை அறிந்தும், புராண வரலாறு அறிந்தும் வருவோம். நாம் படித்ததை, அறிந்ததை இங்கு நாம் யாவர்க்கும் பகிர்வோம். தொடர்ந்து இணைந்திருந்து சிவஞானத்தை பகிருங்கள்.

திருச்சிற்றம்பலம்!!!